வீட்டில் டேரா போட்டு நம்மை படுத்தி வந்த எலிகளை விரட்ட இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!
நம்மில் பலர் வீடுகளில் எலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இந்த எலிகள் நம் உண்ண கூடிய பொருட்களை கடித்து விடுகிறது.இதை கவனிக்காமல் நாம் அதை எடுத்து உண்ணும் பொழுது பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.இவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.
நம் வீட்டில் இருக்கும் எலி நம்மை விட புத்திசாலிகளாக இருப்பதினால் நாம் வைக்கும் எலிப்பொறியில் இருந்து சுலபமாக தப்பித்து விடுகிறது.இந்த எலிகள் வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள்,காகிதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் உண்டு வருவதால் நமக்கு தலைவலியாகவே இவை மாறி விடுகிறது.
இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விடலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கீழ் உள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைத்து எலிகளும் வெளியேறி விடும்.
தேவையான பொருட்கள்:-
*பூண்டு – 1
*தண்ணீர் – 2 கிளாஸ்
*ஸ்ப்ரே பாட்டில் – 1
செய்முறை:-
எலிகளை விரட்ட முதலில் 1 முழு பூண்டு எடுத்துக் கொள்ளவும்.அதனை தோல் உரிக்காமல் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி நன்கு கலக்கி வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும்.
பூண்டு வசனை எலிகளுக்கு பிடிக்காது.அதனால் அவை உடனடியாக வீட்டை விட்டு ஓடி விடும்.
எலி நடமாட்டம் இருக்கும் பொழுது இவ்வாறு செய்தோம் என்றால் அந்த தொல்லை நீங்கி விடும்.
மற்றொரு தீர்வு:-
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்து கொள்ளவும்.அதில்அரிசி சாதம் 4 தேக்கரண்டி போட்டு கையால் நன்கு மசித்து கொள்ளவும்.
பிறகு கேக் செய்ய பயன்படுத்தும் பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்க்கவும்.
முக்கியமாக கையில் ஒரு க்ளவ்ஸ் போட்டு கொண்டு இந்த ரெமிடியை தயார் செய்யவும்.கையுறை இல்லையென்றால் பயன்படுத்தாத அதாவது வீணான டூத் பிரஸ் ஒன்றை வைத்து இந்த பொருட்களை கலக்கவும்.
பேக்கிங் பவுடருக்கு பிறகு கழிவறைக்கு பயன்படுத்தும் ஹார்பிக்கில் இருந்து 2 தேக்கரண்டி எடுத்து அந்த பவுலில் சேர்க்கவும்.பிறகு பிரஸ் அல்லது கையுறை போட்டு கொண்டு நன்கு கலக்கி விடவும்.
அதன் பின் பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுபத்தியின் அட்டை பெட்டி அல்லது வேஸ்ட் அட்டை பெட்டிகளை 4 அல்லது 5 துண்டுகளாக கிழித்து வைத்து கொள்ளவும்.
அதில் செய்து வைத்துள்ள பேஸ்டை தடவி வீட்டில் எலிகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வைக்கவும்.இப்படி செய்வதன் மூலம் எலிகள் அதை உண்ணும்.அதன் பின் வயிறு வீங்கி இறந்து விடும்.இதை தொடர்ந்து 3 முதல் 4 நாட்கள் செய்தால் வீட்டில் உள்ள மொத்த எலிகளும் செத்து மடிந்து விடும்.