அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

0
250
#image_title

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

சிறு பசலைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தரை பசலைக் கீரை சாப்பிட்டு வந்தால் நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். மேலும், தரை பசலைக்கீரை ரத்தசோகை வராமல் தடுக்கும். இக்கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் தரை பசலைக் கீரை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

மேலும், இக்கீரையில் வைட்டமின் A, E மற்றும் K அதிகம் உள்ளது. இதனால், சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்ற நோய்களை சரியாக்கும். இக்கீரையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

சரி வாங்க… சிறு பசலையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்ப்போம் –

தோல் வியாதிக்கு

சிறு பசலை கீரையை அரைத்து, அரை சொறி, சிரங்கு இடத்தில் பற்று போட்டால் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சினை

சிறு பசலை கீரையை அடிக்கடி கூட்டு, குழம்பாக செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண் குணமாகும். மேலும், இக்கீரை மலச்சிக்கல் நோயை போக்கும்.

மாதவிடாய் பிரச்சனை

சிறு பசலை கீரை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் போது ஏற்படும் அதிக ரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி யை சரி செய்யும்.

சீறுநீரக கற்களை நீக்க

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலை கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இந்த உதவுகிறது. சிறுநீரகங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக செயல்பட வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

கல்லீரல் பிரச்சனை போக்க

சிறு பசலை கீரையை வாரம் இரண்டு, மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகளை நீக்குகிறது.

காசநோய்க்கு

தினமும் சிறிது சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் காசநோய் சரியாகும்.

புற்று நோய்க்கு

சிறு பசலை கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை புற்று நோய் செல்களை வேரோடு அழிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு

சிறு பசலை கீரையை சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை இக்கீரை கொடுக்கும். வயதானவர்கள் சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் அதிலிலுள்ள சத்துகள் ரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.