உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் மருக்களை எளிதாக பார்க்க முடிகிறது. இவற்றில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், பல வண்ண மருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றது. உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. இப்படி தோற்று பாதிப்பாக இருக்கும் இந்த மருக்கள் பிரச்சனையை ஓரிரு நாட்களில் எளிதில் சரிசெய்து விடலாம்.
மருக்கள் உதிர எளிய தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*வாசலின் – தேவையான அளவு
*சுண்ணாம்பு – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி சுண்ணாம்பு மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் உடலில் மருக்கள் இருக்கும் இடத்தை சுற்றி வாசலினை தடவ வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள ரெமிடியை மருக்கள் மீது தடவினால் கூடிய விரைவில் அவைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
மற்றொரு தீர்வு:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் காபி தூள் சேர்த்து 1/2 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அனைத்தும் கரையும் வரை கலக்க வேண்டும்.
பிறகு உடலில் இருக்கின்ற மருக்களின் மேல் இதனை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடலில் ஒட்டி கிடந்த மருக்கள் சில நாட்களில் கொட்டி விடும்.