எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றதா!!! இதோ எனர்ஜி தரும் இம்யூனிட்டி லட்டு!!!

0
91
#image_title

எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றதா!!! இதோ எனர்ஜி தரும் இம்யூனிட்டி லட்டு!!!

எப்பொழுதும் சோர்வாக இருந்தால் சேர்வை நீக்கி எனர்ஜியை தரும் இம்யூனிட்டி வட்டி தயார் செய்து சாப்பிடலாம். இந்த இம்யூனிட்டி லட்டை தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இம்யூனிட்டி லட்டு தயார் செய்யத் தேவையான பொருட்கள்…

* வெண்ணெய் – 100 கிராம்
* விதை நீக்கிய பேரிச்சம்பழம் – 350 கிராம்
* முந்திரி – 75 கிராம்
* பாதாம் – 150 கிராம்
* அத்திப்பழம் – 9 முதல் 10
* வால்நட்(ஆக்ரூட்) – 50 கிராம்
* பிஸ்தா – 40 கிராம்
* தர்பூசணி விதை – 25 கிராம்
* சூரியகாந்தி விதை – 40 கிராம்
* பூசணிக்காய் விதை – 40 கிராம்
* ஆளி விதை – 30 கிராம்
* எள்ளு – 20 கிராம்
* கசகச – 20 கிராம்
* உலர் தேங்காய் – 50 கிராம்
* ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்

இம்யூனிட்டி லட்டு தயார் செய்யும் முறை…

* முதலில் பாதம், வால்நட், முந்திரி, பிஸ்தா, தர்பூசணி விதை, சூரியகாந்தி விதை, பூசணி விதை, ஆளி விதை, எள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் ஒன்றை வைத்து அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து மேற்கூறிய பொருட்களை அதில் சேர்த்து பொன்னிறம் வருமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின்னர் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் உலர் தேங்காய் மற்றும் கசகச சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின்னர் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய அத்திப்பழத்தை அதில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் பேரிச்சம் பழத்தை அரைத்து அதை இரண்டு ஸ்பூன் வெண்ணெயில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து உருண்டையாக பிடித்தால் இம்யூனிட்டி லட்டு தயார். இதை கண்டெய்னரில் வைத்து ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

இந்த இம்யூனிட்டி வட்டை சாப்பிட்டு வருவதால் உடலில் அதிக எனர்ஜி கிடைக்கும். நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள், எப்பொழுதும் சோர்வாக இருப்பவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அனைவரும் இந்த வட்டை தயார் செய்து சாப்பிடலாம். இந்த இம்யூனிட்டி லட்டு உடலுக்கு வலிமையை தருகின்றது. குழந்தைகளுக்கு பால் தரும் தாய்மார்கள் இந்த லட்டை எடுத்துக் கூறுவது மிகுந்த நன்மையை அளிக்கும்.

Previous articleபெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் உலர் கண் நோய்!!! இதை குணப்படுத்த சில வழிமுறைகள் இதோ!!!
Next articleபல நோய்களை விரட்டும் நெல்லிக்கனி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?