வீட்டில் பதுங்கி உள்ள கொசுக்களை ஐந்து நிமிடத்தில் ஒழிப்பது எப்படி?
மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு வகைகள் மலேரியா, டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை. கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான்.
இந்த கொசுக்களை 1 கைப்பிடி அளவு புதினா வைத்து உடனடியாக விரட்டி விடலாம். நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓட செய்வதற்கான எளிய ரெமிடி இதோ.
தேவையான பொருட்கள்:-
*புதினா – 1 கைப்பிடி அளவு
*கற்பூரம் – 4
*வேப்பெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:-
புதினா தலை 1 கைப்பிடி அளவு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து பூஜைக்கு பயன்படுத்தும் சூடத்தை(கற்பூரம்) சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து 3 தேக்கரண்டி அளவு வேப்பெண்ணெய் சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
அடுத்து இந்த கலவையை ஆல் அவுட் அல்லது குட் நைட்டில் லிக்விட் ஊற்றும் பொருளில் ஊற்றி செட் செய்து கொள்ளவும். பின்னர் ஆல் அவுட்டை பிளக்கில் கனக்ட் செய்து விடவும். இவ்வாறு செய்தால் அடுத்த 5 நிமிடத்தில் கொசு தொல்லை முழுமையாக நீங்கி விடும்.