என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!! 

0
58
#image_title
என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!!
நம் வீட்டில் இருக்கும் எறும்புகளை அழிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம் வீட்டில் இனிப்பு பண்டங்கள் எங்கு இருந்தாலும் அங்கு எறும்புகள் தொல்லை இல்லாமல் இருக்காது. இந்த எறும்புகள் நம்மை கடிக்கும் வகைகள் மற்றும் கடிக்காத வகைகள் என்று பல வகைகள் உள்ளது. எறும்புகள் வீட்டுக்குள் இருந்தால் நாம் அடிக்கடி அந்த எறும்புகளிடம் இருந்து கடி வாங்க வேண்டியது வரும்.
இந்த எறும்புகள் விரட்டுவதற்கு நாம் எறும்புப் பொடி வாங்கி போட்டிருப்போம். எறும்பு சாக்பீஸ் வாங்கி பயன்படுத்தி இருப்போம். ஆனால் பலன் நடந்திருக்காது. எனவே இந்த பதிவின் மூலம் எறும்புகள் விரட்டும் சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
எறும்புகள் விரட்டும் வழிமுறைகள்…
* எறும்புகளுக்கு புளிப்புச் சுவை ஆகாது. எனவே எறும்புகள் வீட்டினுள் நுழையும் இடத்தில் எலுமிச்சை சாறு தெளிக்கலாம்.
* எறும்புகள் விரட்டுவதற்கு ஆரஞ்சுத் தோலை பயன்படுத்தலாம். அதாவது வெதுவெதுப்பான தண்ணீரில் ஆரஞ்சுப் பழத் தோலை சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து அதை வீட்டினுள் எறும்புகள் வரும் இடத்தில் தேய்க்கலாம்.
* எறும்புகள் வரும் இடத்தில் மிளகுப் பொடியை தூவினால் எறும்புகள் அந்த இடத்தை விட்டு சென்று விடும்.
* எறும்புகள் வரும் இடத்தில் தண்ணீரில் உப்பு கலந்து தெளித்து வந்தால் எறும்புகள் அந்த இடத்தை விட்டு ஓடி விடும்.
* இலவங்கப் பட்டையை எறும்புகள் வரும் இடத்தில் அப்படியே வைக்க வேண்டும். இதன் வாசத்திற்கு எறும்புகள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும்.
* புதினாவை நீரில் கரைத்தோ அல்லது வேறு வழிகளில் எறும்புகளை வீட்டை விட்டு வெளியே துரத்த பயன்படுத்தலாம். ஏனென்றால் எறும்புகளுக்கு புதினா வாசம் ஆகாது.
* வினிகரை ஸ்பிரே பாட்டிலில் கலந்து எறும்புகள் வரும் இடத்தில் இதை ஸ்பிரோ செய்தால் அனைத்து ஏற்பாடுகளும் வீட்டை விட்டு வெளியேறும்.