லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், ஜார்ஜ் மரியம், பிக்பாஸ் ஜனணி, சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்த லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார். இந்நிலையில் லியோ திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் லியே திரைப்படத்தின் வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ படத்தின் பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதாவது லியோதிரைப்படம் வெளியாகி சில தினங்களிலேயே பலரும் லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் கூறும் பிளேஷ்பேக் காட்சிகள் பொய் என்று கூறி வந்தனர். தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் அந்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக ஒரு உண்மையை கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக சமீபத்திய நேர்காணலில் “லியோ தாஸ் பற்றிய பிளேஷ்பேக் கதையை பார்த்திபன் கதாப்பாத்திரத்தின் மூலமாக சொல்லவில்லை. லியே திரைப்படத்தில் யாரோ ஒரு மூன்றாவது மனிதரான மன்சூர் அலிகான் அவர்கள் தான் பிளேஸ்பேக் கதையை சொல்வார். மன்சூர் அலிகான் உண்மையை சொல்லிருக்கலாம் அல்லது பொய் கூட சொல்லிருக்கலாம். அதற்கு காரணம் நடிகர் மன்சூர் அலிகான் அவர்களுக்கு நாங்கள் வைத்த முதல் வசனம் தான்.
முதலில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் கதை கூறும் காட்சியில் ‘ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அந்த வகையில் நான் என்னுடைய பார்வையில் லியோ தாஸ்க்கு இதுதான் நடந்திருக்கும்’ என்று கூறி கதை சொல்ல தொடங்குவார். ஆனால் நாங்கள் அதை நீக்கி விட்டோம்.
எடிட்டர் பிஃலோமின்ராஜ் அவர்கள் தான் கூறினார் இந்த காட்சியை வைத்தால் அடுத்த 20 நிமிடம் நாம் சொல்லும் பிளேஸ்பேக் கதை பொய் என்று அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று கூறினார். இதனால் அந்த காட்சியை தூக்கிவிட்டோம். மேலும் ரசிகர்களையும் சந்தேகத்திலேயே வைத்தோம்” என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.
மேலும் விஜய் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தழும்பு குறித்து கேட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “தன்னுடைய அடையாளத்தையே மறைக்க தெரிந்த பார்த்திபன் கதாப்பாத்திரத்திற்கு உடலில் உள்ள தழும்பை மறைப்பது பெரிய விஷயமா என்ன?” என்று கூறினார்.
எனவே உண்மையாக லியோ தாஸ்க்கு என்ன நடந்தது என்பது லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் அல்லது லோகேஷ் கனகராஜ் அவர்கள் அடுத்து இயக்கும் எல்.சி.யூ திரைப்படங்களில் தெரியவரும்.