சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு !!

0
84
#image_title
சென்னை மக்களின் கவனத்திற்கு! நாளை 53 இரயில்கள் ரத்து என்று தெற்கு இரயில்வே அறிவிப்பு
சென்னையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிக்காக நாளை(அக்டோபர்31) 53 இரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.
சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த புறநகர் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்த புறநகர் மின்சார இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் பிரதான போக்குவரத்து சேவையாக புறநகர் இரயில் சேவை இருந்து வருகின்றது.
இதையடுத்து நாளை(அக்டோபர் 31) சென்னை முதல் விழுப்புரம் இடையிலான இரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே சென்னை கடற்கரை சாலை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கடற்கரை சாலை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார இரயில்களின் சேவை காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணிவரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை சாலைக்கு இயக்கப்படும் இரயில்கள் காலை 9.08 மணிமுதல் மதியம் 3.20 மணிவரை ரத்து செய்யப்படுகிறது.
அதே செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை சாலைக்கு இயக்கப்படும் மின்சார இரயில்களின் சேவை காலை 11 மணி முதல் மதியம் 2.20 மணி வரை ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும்  மின்சார இரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார இரயில், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் காலையில் புறப்படும் 10 இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சிறப்பு இரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி காலை 11.51 மணிக்கும், மதியம் 12.35, 1.15, 1.35, 1.55, 2.45, 3.10, 3.30 ஆகிய நேரங்களில்  தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சிறப்பு மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்றும் அதே போல மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை காலை 9.30 மணிக்கும்,  மதியம் 12 மணிக்கும், 1 மணிக்கும், 1.15 மணிக்கும், 2.20 மணிக்கும் சிறப்பு மின்சார இரயில்கள் இயக்கப்படவுள்ளது.