உடலில் உள்ள தழும்புகள் மறைய வைக்க வேண்டுமா! கோகோ பட்டரை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Sakthi

உடலில் உள்ள தழும்புகள் மறைய வைக்க வேண்டுமா! கோகோ பட்டரை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமது உடலில் அடிபட்டு காயத்தின் நினைவாக தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையாது. ஆயுள் முழுவதும் நம்முடன் வரும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடமும் உள்ளது. ஆனால் இதற்கான. மருந்துகள் மாத்திரைகள் சிகிச்சை முறைகள் என்று பல வந்துள்ளது. இந்த பதிவில் அந்த வகைகள் இல்லாமல் இயற்கையான முறையில் தழும்பை மறைய வைப்பது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம்.

தழும்பை மறைய வைக்க நாம் கோகோ பட்டரை பயன்படுத்தலாம். கோகோ பவுடர் மற்றும் அதிலிருந்து தயார் செய்யப்படும் பட்டர் இரண்டும் உடலுக்குத் தீமை அளிக்கும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் இவை நமது சருமத்திற்கு பல ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்றது. இந்த வகையில் கோகோ பட்டரை நாம் தழும்பு மறைய வைப்பது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்..

* கோகோ பட்டர்
* தேங்காய் எண்ணெய்
* சர்க்கரை
* இலவங்கப்பட்டை பொடி

தயார் செய்யும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். கோகோ பட்டர் ஒரு ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் உருக்க வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை 3 ஸ்பூன் மற்றும் இலவங்கப்பட்டை அரை ஸ்பூன் சேர்த்து ஸ்கிரப் போல தயார் தயார் செய்து பின்னர் இதை காற்றுபுகாத பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தழும்பை மறைய வைக்க கூடிய மருந்து தயார் ஆகி விட்டது.

பயன்படுத்தும் முறை

* இந்த ஸ்கிரப்பை பயன்படுத்தப் செல்லும் முன்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்க வேண்டும்.

* அதன் பின்னர் இந்த ஸ்கிரப்பை சிறிதளவு எடுத்து மெதுவாக சருமத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் மசாஜ் செய்துவிட்டு 10 நிமிடம் கழிந்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடவேண்டும்.

* அதன் பின்னர் கோகோ பட்டர், ஷியா பட்டர், தேன் மெழுகு, வைட்டமின் இ எண்ணெய் இவற்றில் எதையாவது ஒன்றை மாய்சுரைசராக பயன்படுத்தலாம். தினமும் இதை இரண்டு முறை பயன்படுத்தலாம்

காரணத்தினால் ஏற்படும் தழும்புகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தழும்புகள், பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தழும்புகள் ஆகியவற்றை மறையச் செய்வதற்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.