இப்படி செய்தால் ஒரு எலி கூட வீட்டு பக்கம் அண்டாது!! 100% தீர்வு தரும் எளிய வழிகள் இதோ!!
*ஒரு தட்டில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு, 1 1/2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை மற்றும் 10 முதல் 15 தீ குச்சிகளின் மருந்தை சேர்த்து கலந்து கொள்ளவும் கொள்ளவும். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அவற்றை உண்டு எலிகள் செத்து மடிந்து விடும். கோதுமை மாவுக்கு பதில் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவு கூட சேர்க்கலாம்.
*ஒரு பவுலில் 4 தேக்கரண்டி அளவு பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும். அதோடு 1 தேக்கரண்டி சோடா உப்பு, 2 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும். இந்த உருண்டையை எலிகள் சாப்பிட்டால் வயிறு உபசமாககி சிறிது நேரத்தில் செத்து மடிந்து விடும்.
*ஒரு முழு பூண்டை தோல் நீக்காமல் மிக்ஸி அல்லது உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி
எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் எலி தொல்லை நீங்கும்.
*கையில் ஒரு க்ளவ்ஸ் போட்டு கொண்டு ஒரு பவுலில் 4 முதல் 5 தேக்கரண்டி அரிசி சாதம் போட்டு மசித்து கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 2 தேக்கரண்டி ஹார்பிக் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். க்ளவ்ஸ் இல்லாதவர்கள் வேஸ்ட் பிரஸ் இருந்தால் பயன்படுத்தலாம். அடுத்து ஊதுபத்தி அட்டையை சிறு துண்டுகளாக கிழித்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை தடவி எலி நடமாட்டம் காணப்படும் இடங்களில் வைக்கவும். இப்படி செய்வதால் எலிகள் அதை உண்டு வயிறு வீங்கி இறந்து விடும்.