வெள்ளை முடி பிரச்சனை? அப்போ இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

0
169
#image_title

வெள்ளை முடி பிரச்சனை? அப்போ இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

இன்றைய நவீன கால வாழ்க்கைச் சூழலில் சிறியவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை வருவது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம். இந்த இளநரையை சரி செய்ய கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி முடியை கருமை நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள்.

அந்த வகையில் அவுரி, கருவேப்பிலை, செம்பருத்தி, மருதாணி உள்ளிட்டவைகள் நரை முடியை கருப்பாக மாற்ற பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*அவுரிப் பொடி – 3 தேக்கரண்டி

*கருவேப்பிலை பொடி – 2 தேக்கரண்டி

*மருதாணி இலை பொடி – 3 தேக்கரண்டி

*செம்பருத்தி இதழ் பொடி – 2 தேக்கரண்டி

*உப்பு – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி மருதாணி பொடியை சேர்த்து கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து காற்று புகாத வண்ணம் ஒரு மூடி கொண்டு மூடவும்.

மறுநாள் காலையில் தயார் செய்து வைத்துள்ள மருதாணி பேஸ்ட் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து அவற்றை முடிகளின் வேர்காள் பகுதியில் படுமாறு அப்ளை செய்து கொள்ளவும். இதை தலையில் 3 மணி நேரம் வரை வைத்திருந்து ஷாம்பு பயன்படுத்தாமல் தலையை அலசவும்.

பின்னர் தலைமுடி நன்கு காய்ந்த பிறகு ஒரு சிறிய பவுலில் 3 தேக்கரண்டி அவுரிப் பொடி, 2 தேக்கரண்டி கருவேப்பிலை பொடி, 2 தேக்கரண்டி செம்பருத்தி பொடி மற்றும் 2 பின்ச் அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு மாற்றவும்.

இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு பின்னர் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி முடியை அலசவும். ஷாம்பு, சீயக்காய், அரப்பு, பூந்தி கொட்டை என எதுவும் தலைக்கு உபயோகிக்க கூடாது.

அடுத்த நாள் தலைக்கு நல்லெண்ணெய் மட்டும் வைத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் முடி இயற்கையாகவே கருப்பாக மாறிவிடும்.

மேலே குறிப்பிட்டுள்ள அவுரிப் பொடி, செம்பருத்தி இதழ் பொடி, மருதாணி பொடி, கருவேப்பிலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Previous articleதீபாவளி சமயத்தில் பணம் சம்பாதிக்க 6 முத்தான வழிகள்!!
Next articleஅடகு வைத்த மொத்த நகைகளையும் ஒரே வருடத்தில் மீட்க சூப்பர் ஐடியா!!