அடகு வைத்த மொத்த நகைகளையும் ஒரே வருடத்தில் மீட்க சூப்பர் ஐடியா!!

0
59
#image_title

அடகு வைத்த மொத்த நகைகளையும் ஒரே வருடத்தில் மீட்க சூப்பர் ஐடியா!!

நம்மில் பலர் அவசரத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் திணறி வருகிறோம். நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நகையை மீட்க முடியாமல் வருடங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வட்டி மட்டும் தான் கட்டமுடிகிறது. அசலுக்கான பணத்தை சேமிக்க முடியவில்லை என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை கடைபிடித்து பாருங்கள். நீண்ட காலமாக வங்கியில் தூங்கி கொண்டிருக்கும் நகைகளை ஒரே வருடத்தில் மீட்டு விடலாம்.

ஸ்டெப் 1:

உங்களது நகைகளை அரசு வைப்பதே சிறந்த முறை. காரணம் அரசு வங்கியில் வட்டி குறைவு, நம் நகை பாதுகாப்பாக இருக்கும். நாம் நகையை அடகு வைத்து உடனே மீட்க முடியாது. தனியார் வங்கி, அடகு கடை உள்ளிட்ட இடங்களில் வைத்தால் அதிக வட்டி கட்ட வேண்டி வரும். எனவே உங்கள் நகையை அடகு கடை, தனியார் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்திருந்தால் அதை மூட்டு அரசு வங்கியில் வையுங்கள்.

கடன் வாங்கியாவது தனியார் இடத்தில் அடகு நகையை மூட்டு அரசு வங்கியில் வைக்கவும். பின்னர் நகைக்கான பணம் கிடைத்ததும் வாங்கிய கடனை அடைத்து விடுங்கள்.

ஸ்டெப் 2:

அரசு வங்கியில் அடகு உடன் நம்முடைய நகையை மீட்க அசல் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு கொள்ளுங்கள். கணக்கிட்டு வரும் தொகையை 12 ஆல் வகுத்து வரும் தொகையை ஒவ்வொரு மாதமும் சேமிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு,

அசல்: 100000

வட்டி விகிதம்: 70 பைசா

மாதம்:

வட்டி கணக்கீடு:

100000 x 0.70% x 12 = 8,400 (வருட வட்டி)

100000 x 0.70% x 1(மாதம்) = 700(மாத வட்டி)

அப்போ அடகு வைத்த நகையை ஒரு வருடத்தில் மீட்க அசல் + வட்டியை கணக்கிட்டால் ரூ.1,08,400 வருகிறது.

இந்த 1,08,400 த்தை 12 ஆல் வகுத்தால்,

1,08,400 / 12 = 9,033 வருகிறது.

ஆகவே ஒவ்வொரு மாதமும் 9,033 ரூபாயை சேமித்து வர வேண்டும். வருட முடிவில் நகையை மீட்பதற்கான பணம் கையில் இருக்கும்.

ஸ்டெப் 3:

உங்களது வருமானம் குடும்ப செலவை சமாளித்து சேமிக்கும் வகையில் இருந்தால் மாத மாதம் நகையை மீட்பதற்கான தொகையை ஒதுக்கி வைத்து வாருங்கள். இல்லை நான் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு சரியாக இருக்கிறது. சேமிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் பார்ட் டைம் ஜாப் செய்து பணம் சேமிக்கலாம். அல்லது செய்யும் வேலையில் ஓவர் டைம் பார்த்து தேவைப்படும் பணத்தை சேமிக்கலாம்.

ஸ்டெப் 4:

நம்முடைய வருமானத்தில் இருந்து 10% முதல் 20% தொகையை நகை கடனுக்கு என்று ஒதுக்கி வைத்து விட வேண்டும். இதை செய்வதற்கு நாம் அனாவசியமான செலவுகள் என்னவென்று குறித்து வைத்துக் கொண்டு அந்த செலவை நகையை மீட்கும் வரை தவிர்க்க வேண்டும்.

ஸ்டெப் 5:

கிப்ட் அமௌன்ட், சில்லறை காசு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாகிய பின் கிடைக்கும் தொகை, தேவை இல்லாத செலவுகளை தவிர்த்து மிச்சம் செய்த பணம் உள்ளிட்டவைகளை ஒரு உண்டியல், பர்ஸில் போட்டு சேமித்து வைக்கவும். இவ்வாறு சிறுக சிறுக சேமித்த பணமும் நாளைக்கு நகையை மீட்க பெரிய தொகையாக உருவெடுக்கும்.

ஸ்டெப் 6:

ஒரு வருடத்தில் பெரிய தொகையை சேமிக்க ஏலச் சீட்டு போடலாம். நம்பகத்தன்மை உள்ள ஆட்களிடம் சீட்டு கட்டுவதை உறுதி செய்து கொள்ளவும். வங்கியில் உள்ள சேவிங்ஸ் ஸ்கீமில் சேர்ந்து பணத்தை சேமிக்கலாம். அல்லது தொடர் வைப்பு நிதி(RD), நிரந்தர வைப்பு நிதி(FD) ஸ்கீமில் சேர்ந்து பணத்தை சேமித்து நகையை மீட்கலாம்.