சின்ன கலைவாணர் விவேக் பற்றி தெரியாத சில தகவல்கள்!

0
114
#image_title

சின்ன கலைவாணர் விவேக் பற்றி தெரியாத சில தகவல்கள்!

சினிமாவில் பலரும் பல விதத்தில் தங்களின் கருத்துக்களை சொல்வார்கள். ஆனால் நகைச்சுவையின் மூலம் தன்னுடைய ஸ்டைலில் சமூக சீர்திருத்த கருத்துக்களை முன் வைத்தவர் தான் விவேக். அது மட்டும் இல்லாமல் சாமானியர்களும் திறமை இருந்தால் சினிமாவில் நுழையலாம் என்று எடுத்துரைத்தவர்.

பெருங்கோட்டூரில் பிறந்த விவேகானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட விவேக் ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பணியாற்றினார். அதன் பிறகு மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் எழுத்தாளராக பணிபுரிந்து, அதே சமயம் பாலச்சந்தர் இயக்கிய படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன்படி 1987இல் தனது திரை பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பாலச்சந்தரின் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். 25 வருடங்களாக சினிமாவில் பணியாற்றிய இவர் ஏழையின் சிரிப்பில், சாமி, பேரழகன், யூத், அந்நியன் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர் எடிசன் விருது, பத்மஸ்ரீ விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது என பல விருதுகளையும் அள்ளி இருக்கிறார். குறிப்பாக இவரைப் பற்றி சொல்ல வேண்டுமேன்றால், விவேக்கின் காமெடிகளில் வெறும் நகைச்சுவை மட்டும் இல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல சமூக கருத்துக்களும் நிறைந்திருக்கும். இவருடைய நகைச்சுவைகள் சமூகத்தில் சாதி, மதம், லஞ்சம், வறுமை, மூடநம்பிக்கை, பெண் சிசுக்கொலை ஆகியவைகளை ஒழிக்கும் விதத்தில் இருக்கும். சாமி போன்ற படங்களில் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதையும் கூறியிருப்பார்.

அதனாலேயே பலரும் இவரை சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என்று அழைத்தனர். நிறைய விஷயங்களை முன் வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அந்த வகையில் வர்தா புயல் சமயங்களில் ஒரு மரம் சரிந்தால் நான்கு மரம் நடுவோம் என்றார்.

மேலும் இவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் சீடனாக இருந்ததால் ‘கிரீன் கலாம்’ என்ற திட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் 33,23,000 – க்கும் மேலான மரங்களை நட்டு வைத்துள்ளார். ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்பதுதான் இவரின் கனவாக இருந்தது. அதன் காரணமாக தான் விவேக் மறைந்தாலும் அவரைப் பற்றிய பசுமைப்புரட்சி அனைவரிடமும் எழுந்துள்ளது.
க௧டைசி வரை ஜனங்களின் கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தார் விவேக்.