179 ரன்களுக்கு சுருங்கிய நெதர்லாந்து! அடுத்த வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி!!

0
93
#image_title

179 ரன்களுக்கு சுருங்கிய நெதர்லாந்து! அடுத்த வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி!!

ஆம்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய(நவம்பர்3) லீக் சுற்றில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்று(நவம்பர்3) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றது. லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களில் வெஸ்லே பரேசி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் ஓடோவ்ட் அவர்களும் கோலின் அக்கர்மேன் இருவரும் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினர்.

இருப்பினும் கோலின் அக்கர்மேன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய சைப்ரன்ட் எங்கல்பிரெச்ட் தொடங்கியது வீரர் மேக்ஸ் ஓடோவ்ட் அவர்களுடன் சேர்ந்து ரன் சேர்க்கத் தொடங்கினார். தொடர்ந்து விளையாடிய மேக்ஸ் ஓடோவ்ட் 42 ரன்களுக்கும் சைப்ரன்ட் எங்கல்பிரெச்ட் அரைசதம் அடித்து 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சிற்ப ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொகம்மது நபி அவர்கள் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் முஜீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.