உங்கள் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0
158
#image_title

உங்கள் அக்குளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

இன்றைய காலத்தில் உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பு இருக்கின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறோம்.

இதனால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. குளித்தாலும் கூட இந்த அக்குள் துர்நாற்ற தொல்லை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. இந்த காரணத்தினால் அக்குள் வியர்வை துர்நாற்றத்தை சரி செய்வதற்காக பலரும் போராடி வருகின்றோம்.

அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வதன் காரணமாக அவ்விடத்தில் வியர்வையாக மாறி கெட்ட வாடை வீச தொடங்குகிறது. இவற்றை வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:-

*பன்னீர்

*எலுமிச்சம் பழம்

*தூள் உப்பு

*கடலை மாவு

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அவற்றில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அடுத்து 1/4 தேக்கரண்டி கடலை மாவை எலுமிச்சையில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அக்குளில் சிறிதளவு பன்னீர்(ரோஸ் வாட்டர்) அப்ளை செய்து கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ளவற்றை எடுத்து அக்குள் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும். சுமார் 5 நிமிடங்கள் தேய்த்த பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அக்குள் பகுதியில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு துர்நாற்றம் ஏற்படுவது அடியோடு நீங்கும்.