அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!
நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும்.
8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய அனைவருடைய வாழ்க்கைக்கும் தேவையான ஒன்று. இதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது. அதில் முதல் எட்டு மணி நேரத்தை வேலை செய்வதற்கு ஒதுக்கலாம். இரண்டாவது எட்டு மணி நேரத்தை ஓய்வு எடுப்பதற்காகவோ அல்லது நமக்கு பிடித்தவற்றை செய்வதற்காகவோ ஒதுக்கலாம். கடைசி எட்டு மணி நேரத்தை நாம் நன்கு தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.
முதல் எட்டு மணி நேரம் வேலை…
ஒரு நாளின் முதல் எட்டு மணி நேரத்தை நாம் வேலை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் முதல் 8 மணிநேரத்தில் வேலைக்காக பயன்படுத்தும் பொழுது உடல் அதற்கு தகுந்த போல ஒத்துழைப்பு தரும். இது நம்முடைய செயல்திறனை அதிகரிக்க உதவி செய்கின்றது. ஒரு நாளின் முதல் எட்டு மணி நேரத்தில் மட்டும் தான் உடலும் மனமும் சீரான மற்றும் முழுமையான இயக்கத்தில் இருக்கும். இதன் மூலம் பல நல்ல எண்ணங்களையும் நல்ல பழக்கங்களையும் நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும்.
8 மணி நேரம் ஓய்வு…
இரண்டாவது 8 மணி நேரத்தை நாம் நம்முடைய தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாம் இரண்டாவது எட்டு மணி நேரத்தில் ஓய்வு எடுக்கலாம். அல்லது வேறு எதாவது படிப்பது போன்ற மற்ற காரியங்களை செய்யலாம். இந்த எட்டு மணி நேரத்தில் புத்தகம் வாசிப்பது, பிடித்தவற்றை பார்ப்பது, தோட்டக்கலை, சமையல் செய்வது, விளையாட்டு போன்ற மற்ற செயல்களில் ஈடுபடலாம். இவ்வாறு செய்வதால் மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்து மன அழுத்ததை குறைக்கின்றது. இவ்வாறு செய்வதால் ஒரே விஷயத்தில் நம்முடைய மனதை ஊக்குவிக்கவும் மனதை அலை பாய்வதில் இருந்து கட்டுப்படுத்தி கவனம் சிதறுவதை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும்.
எட்டு மணி நேரம் நல்ல தூக்கம்…
மூன்றாவது மற்றும் கடைசி எட்டு மணிநேரத்தில் நாம் நன்கு தூங்க வேண்டும். நாம் சீராக 8 மணி நேரம் தூங்குவதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகளை சீராக இயங்குவதற்கு வழி செய்கின்றது. இவ்வாறு 8 மணி. நேரம் தூங்கும் பொழுது நாள் முழுவதும் வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, தசை இறுக்கம், அழுத்தம், பதற்றம் இவற்றை அனைத்தையும் குணப்படுத்தி படைப்பாற்றல், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். நாம் சீராக தூங்கினால் உடலில் சருமம் பொலிவு பெறும். உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும்.