தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!

0
93
#image_title

தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!

நேற்று(நவம்பர்7) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

நேற்று(நவம்பர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் இப்ரஹிம் ஜட்ரான் பொறுமையாக ரன் சேர்க்கத் தொடங்கினார். இப்ரஹிம் ஜட்ரான் ஒருபுறம் ரன்களை சேர்க்க மறுபுறம் விளையாடிய ரஹ்மத் 30 ரன்களும், ஷாகிதி 26 ரன்களும், அஷ்மத்துல்லா 22 ரன்களும், முகம்மது நபி 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய இப்ரஹிம் ஜட்ரான் சதமடித்தார்.

உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் ஜட்ரான் பெற்றார். அவருடன் இறுதியாக களமிறங்கிய ரஷித் கான் அதிரடியாக விளையாடி 35 ரன்கள் சேர்த்தார். இதனால் 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஜாம்பா, மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 292 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஹெட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 18 ரன்களுக்கும் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் 24 ரன்களுக்கும், லபசக்னெ 14 ரன்களுக்கும் ஜோஸ் இங்க்லிஷ் ரன் எதவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மேலும் மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் பொறுமையாக விளையாடத் தொடங்கினார். அவருடன் இணைந்த பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து விளையாடிய மேக்ஸ்வெல் சதமடிக்க ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியானது.

சதமடித்த பிறகு அதிரடியாக விளையாடத் தொடங்கிய மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கும் பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்து 10 சிக்சர்கள் 21 பவுண்டரிகள் உள்பட 201 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றியின் மூலமாக 6வது வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி பெட்டிக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது. மேலும் நேற்றைய(நவம்பர்7) இரட்டை சதம் அடித்ததன் மூலமாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் பெற்றார்.