பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!!
பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியை சரிசெய்ய உதவும் ரோஜா பூ டீயை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தலையில் வைக்க பயன்படும் ரோஜா பூவில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த ரோஜா பூவை தலைக்கு மட்டும் வைக்க மட்டுமே பயன்படுத்தாமல் நாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க பயன்படுத்தால்ம.
இந்த ரோஜா பூவை நாம் அரைத்து விழுதாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். டீ தயார் செய்து குடிக்கலாம். இந்த ரோஜா பூவில் டீ தயார் செய்து குடிக்கும் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது. இந்த டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
ரோஜா பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* ரோஜா இதழ்கள்
* பட்டை
* கிராம்பு
* ஜாதிக்காய்
தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்து வரும் பொழுது அதில் ரோஜா இதழ்களை போட்டு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் இவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு இதை வடிகட்டி குடிக்கலாம். மாணவியரின் பொழுது ஏற்படும் வலியை குறைக்க இந்த டீ நல்ல மருந்தாக இருக்கும்.
ரோஜா பூ டீயின் மற்ற நன்மைகள்…
* இந்த ரோஜா பூ டீயை தயார் செய்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும். இதனால் உடல் எடை குறையும்.
* செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் ரோஜா பூ டீ தயார் செய்து குடிக்கலாம். செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.
* ரோஜா பூ டீயை தயார் செய்து குடிக்கும் பொழுது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
* ரோஜா பூ டீயை தயார் செய்து குடிக்கும் பொழுது புற்றுநோய் தடுப்பு மருந்தாக செயல்படும்.
* ரோஜா பூ டீ உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவி செய்கின்றது.
* சதை பிடிப்பு பிரச்சனைக்கு நிவாரணம் தரும் மருந்தாக இந்த ரோஜா பூ டீ பயன்படுகின்றது.