“மூட்டு வலி” உங்களைப்படுத்தி எடுக்கிறதா? அப்போ இதை ஒரு சொட்டு மூட்டுகளின் மேல் வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்கள்!!

Photo of author

By Divya

“மூட்டு வலி” உங்களைப்படுத்தி எடுக்கிறதா? அப்போ இதை ஒரு சொட்டு மூட்டுகளின் மேல் வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.

மூட்டுவலி வரக் காரணங்கள்:-

*உடல் பருமன்

*முதுமை

*எலும்புகளில் அடிபடுதல்

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை பூண்டு பற்கள் – 15

*மஞ்சள் தூள் – சிறிதளவு

*கடுகு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*வேப்ப எண்ணெய் – 2 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 15 பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு கடாயில் 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய், 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய், 2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும்.

பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய் ஊற்றி வைத்துள்ள காடாயை வைக்கவும்.

பின்னர் எண்ணெய் சூடேறி வந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். தொடர்ந்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெய் கலவையை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை இரவு தூங்கும் பொழுது மூட்டுகளின் மேல் வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் தடவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் சரியாகி விடும்.