வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!!
நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.
சிலருக்கு பல் துலக்கினாலும், துலக்கா விட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும். இந்த வாய் துர்நாற்றத்தை சரி முடியாமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.
வாய் துர்நாற்றம் உண்டாக காரணங்கள்:-
**சொத்தைப் பல்
**வாய்ப்புண்
**வயிற்று கோளாறு
**வயிற்று புண்
**முறையாக பல் துலக்காதது
**பற்களில் ஏற்படும் மஞ்சள் கறை
**பல் இடுக்குகளில் உணவு துகள்கள் சிக்கி கொள்ளுதல்
இந்த பிரச்சனையை இயற்கை முறையில் சுலபமாக போக்கிவிட முடியும்.
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*பட்டை
*தண்ணீர்
செய்முறை..
ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு பட்டையை போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.
இதை உங்கள் பல் துலக்கும் பிரஷில் அப்ளை செய்து பற்களை நன்கு துலக்கவும். இவ்வாறு செய்வதினால் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
அதேபோல் காலை மற்றும் இரவு உணவு பின் பட்டை பொடியை தண்ணீர் கலந்து வாயை கொப்பளித்து சுத்தம் செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் அகலும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
*கிராம்பு
*தண்ணீர்
செய்முறை..
ஒரு மிக்ஸி ஜாரில் 10 இலவங்கத்தை போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.
இதை உங்கள் பல் துலக்கும் பிரஷில் அப்ளை செய்து பற்களை நன்கு துலக்கவும். இவ்வாறு செய்வதினால் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் நீங்கும்.
அதேபோல் காலை மற்றும் இரவு உணவு பின் கிராம்பு பொடியை தண்ணீர் கலந்து வாயை கொப்பளித்து சுத்தம் செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் அகலும்.