இது தெரியுமா? ஒரு பல் பூண்டை சுடுநீரில் தட்டி போட்டு பருகினால் நடக்கும் மாயாஜாலம்!
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு வெறும் வாசனை நிறைந்த பொருள் மட்டும் கிடையாது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்து காணபடுகிறது. உடல் பருமன், சளி, இருமல் உள்ளிட்ட பல வித நோய் பாதிப்புகளுக்கு அருமருந்தாக இந்த பூண்டு திகழ்கிறது.
பூண்டில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-
கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.
பூண்டு நீர் நம் உடலுக்கு எந்த அளவில் நன்மைகளை வாரி வழங்குகிறது?
**நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.
**உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவதில் பூண்டு சிறந்த தீர்வாக இருக்கிறது.
**சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய பூண்டு பல்லை பயன்படுத்தலாம்.
**முகத்தை பொலிவு பெற வைப்பதில் இதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
**இரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு உள்ளிட்டவைகளுக்கு பூண்டு சிறந்த தீர்வாக இருக்கிறது.
**செரிமான பிரச்சனை, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய பூண்டு பெரிதும் உதவுகிறது.
**சொத்தைப்பல் வலியை குணமாக்க இவை பெரிதும் உதவுகிறது.
பூண்டு நீர் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*பூண்டு – 3 பற்கள்
*தேன்- தேவையான அளவு
*டீ தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
பூண்டு தேநீர் செய்வதற்கு முதலில் 3 பற்கள் பூண்டு தோல் நீக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் அதை இடித்து கொள்ளவும்.
அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
பின்னர் நீங்கள் உபயோகிக்கும் டீ தூள் 1/2 தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் பூண்டு நீரில் போடவும். அவை நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் சுவைக்காக தேன் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.