உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!

0
90
#image_title

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!

நம்மில் பலருக்கு ஏற்படும் சளி பாதிப்பு என்பது சாதாரன ஒன்று தான் என்றாலும் அவை அடிக்கடி ஏற்படும் பட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்வதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

சளியால் ஏற்படும் பாதிப்பு:-

*ஆஸ்துமா

*மூக்கில் அலர்ஜி

*சைனஸ் பாதிப்பு

*மூச்சிரைப்பு

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*தொண்டை வலி

*தொண்டை புண்

சளி தொல்லை நீங்க மூலிகை கஷாயம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*வெற்றிலை – 1

*ஓமவல்லி – 1

*துளசி – சிறிதளவு

*வெல்லம் (பொடித்து) – தேவையான அளவு

*மிளகு – 5

செய்முறை…

ஒரு உரலில் 5 மிளகு சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து 1 வெற்றிலை, 1 ஓமவல்லி, சிறிதளவு துளசி சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பிறகு இடித்து வைத்துள்ள மிளகை சேர்த்துக் கொள்ளவும்.

தொடர்ந்து இடித்து வைத்துள்ள ஓமவல்லி, வெற்றிலை மற்றும் துளசி இலைகளை சேர்த்து காய்ச்சவும்.

பின்னர் சிறிதளவு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகினால் சளி பாதிப்பு விரைவில் சரியாகும்.

Previous articleஇந்த நாளில் பர்ஸ் வாங்கினால் உங்கள் பர்ஸில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!! ட்ரை செய்து பாருங்கள்!!
Next articleதினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!