தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

0
129
#image_title

தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

நம் தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான சீரகம் அதிக வாசனையோடு இருப்பதோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:-

இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம்.

தினமும் சீராக டீ பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்:-

**வாயுத் தொல்லையை சரி செய்ய இந்த சீரகத் தேநீர் பெரிதும் உதவுகிறது.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள தினமும் சீர்கத் தேநீர் அருந்துவது நல்லது.

**செரிமானக் கோளாறுக்கு சிறந்த தீர்வாக இருப்பது இந்த தேநீர் தான்.

**அடிக்கடி தலைசுற்றல் பிரச்சனை இருக்கும் நபர்கள் சீரகத்தில் டீ செய்து பருகலாம்.

**உடலில் உள்ள பித்தத்தை குறைக்க சீரக டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சீரக டீ பருகி வாருங்கள்.

சீரக டீ செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*பனங்கற்கண்டு

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகவும்.

Previous articleஉங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!
Next articleஉங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!!