ABC ஜூஸ் தெரியும்.. அது என்ன PBC ஜூஸ்? பெண்களுக்கான வரப்பிரசாதம் இது!!
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸில் பல வகைகள் இருக்கிறது. அதிலும் கேரட், பீட்ரூட், அன்னாசி பழத்தை வைத்து தயாரிக்கப்படும் PBC ஜூஸ் பெண்களுக்குள் உடல் சார்ந்து ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் வைத்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ் போலவே இந்த PBC ஜூஸும் அதிக சத்துக்களை கொண்டிருக்கிறது.
PBC ஜூஸில் உள்ள சத்துக்கள்:-
வைட்டமின் ஏ, டி, இ, கால்சியம், ஆன்டி – ஆக்சிடென்டுகள், இரும்பு, நார்ச்சத்து, போலிக் அமிலம், சோடியம், மெக்னீசியம், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.
PBC ஜூஸ் பயன்கள்:-
**இரத்த சோகை பாதிப்பு இருக்கும் நபர்கள் இந்த ஜூஸ் அருந்துவது நல்லது. இதில் அதிகளவு இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகையை விரைவில் குணமாக்கும்.
**நம் சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள இந்த பைனாப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.
**பெண்களே உங்களுக்கு இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனை நீங்க இந்த PBC ஜூஸ் அருந்துங்கள்.
**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் அருந்தலாம்.
**இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது.
**தோல் சுருக்கத்தை சரி செய்து இளமையை மீட்டெடுக்க இந்த ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.
PBC ஜூஸ் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*பைனாப்பிள் – 4 துண்டு
*பீட்ரூட் – 5 துண்டு
*கேரட் – 3 துண்டு
செய்முறை…
1 கீற்று அன்னாசிப் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பைனாப்பிள், பீட்ரூட், கேரட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும்.