இது தெரியுமா? தினமும் ஒரு பூண்டு பல் பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாயாஜாலம்!!

Photo of author

By Divya

இது தெரியுமா? தினமும் ஒரு பூண்டு பல் பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாயாஜாலம்!!

Divya

இது தெரியுமா? தினமும் ஒரு பூண்டு பல் பச்சையாக சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாயாஜாலம்!!

நம் அன்றாட சமையலில் மணத்தை கூட்டும் பூண்டு உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான் பயன்படுகிறது. பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இந்த பூண்டை தேனில் ஊறவைத்தோ,பாலில் கலந்தோ பருகினால் பருகினால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களை விட வெறும் பூண்டு பற்களை சாப்பிடுவதன் மூலமும் அதிக அளவு சத்துகளை பெற முடியும்.

பூண்டு பற்களில் உள்ள சத்துக்கள்:-

வைட்டமின் பி6, கால்சியம், காப்பர், மெக்னிசியம், வைட்டமின் சி, அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பல் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-

**இரத்தத்தில் உள்ள சரக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் இந்த பூண்டின் மூலம் கிடைக்கும்.

**வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு பல் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இவை பெரிதும் உதவும்.

**இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய பூண்டு பற்களை சாப்பிட்டு வரலாம்.

**நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீரக வைத்துக் கொள்ள இந்த பூண்டு பல் பெரிதும் உதவுகிறது.

**உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து நம் உடலை பாதுகாக்க பூண்டு பல் சிறந்த தீர்வாக இருக்கும்.

**முகத்தில் காணப்படும் முகப்பருக்களை குணமாக்கி முகத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

**செரிமானக் கோளாறு இருக்கும் நபர்கள் தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிட்டு வரலாம். இவை சொத்தைப்பல் வலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.