ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
இந்த உலகில் சைவ மற்றும் அசைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர், அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி விட்டோம். கோழி, ஆடு, மீன், பன்றி, மாட்டிறைச்சி என்று பல வகைகள் உலகில் இருக்கின்றது.
இந்த இறைச்சிகளில் பிரியாணி, வறுவல், கிரேவி, சில்லி, குழம்பு என்று பல வகைகள் செய்யப்பட்டு சுவைத்து வரும் நிலையில் பெரும்பாலானோருக்கு பிராய்லர் கோழிக்கு அடுத்து ஆட்டிறைச்சி தான் மிகவும் பிடித்த அசைவமாக இருக்கிறது. இந்த வகை இறைச்சிகள் மிகவும் சுவையாகவும், அதிக சதைப்பற்றுடனும் இருப்பதினால் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
இந்த இறைச்சியில் அதிகளவு புரதம்,
கொழுப்பு, இரும்பு, ஜிங்க், மினரல், வைட்டமின்கள், கலோரிகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. என்ற போதிலும் இவற்றை அதிகளவில் உண்பதினால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஆட்டிறைச்சி அதிகம் உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-
1)இந்த வகை இறைச்சி உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வில்லையென்றால் அதில் உள்ள கொழுப்பு நம் உடலின் எடையை விரைவில் கூட்டி விடும்.
2)ஆட்டிறைச்சியை அதிகளவு உண்டு வந்தோம் என்றால் இதயம் தொடர்பான பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.
3)அதிக வெப்பநிலையில் ஆட்டிறைச்சியை சமைப்பது உண்ணும் பொழுது அவை உடலில் வீக்கத்தை அதிகரிப்பதோடு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
4)தொடர்ந்து அதிகளவு ஆட்டிறைச்சி உணவுகளை உட்கொண்டு வந்தோம் என்றால் நம் வாழ்நாள் எளிதில் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.
5)குறைவான அளவில் ஆட்டிறைச்சி உண்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டோம் என்றால் கல்லீரல், மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.