மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!!

0
93
#image_title

மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான தகவல் தான்!!

மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம் ஆகும். நிம்மதியான தூக்கம் தான் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் மருந்தாகும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் நிம்மதியான தூக்கம் என்ற ஒன்று இருப்பதில்லை.

சிலர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவதால் அவர்களுக்கு உடல் சார்ந்த பல பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் சிலருக்கு இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் பகல் நேரத்தில் நன்றாக தூக்கம் வரும். குறிப்பாக பெண்களுக்கு தான் இவ்வாறு நடக்கும். காரணம் குழந்தைகளால் இரவு நேர தூக்கம் கெடும். இல்லையென்றால் ஹோம் மேக்கராக இருந்தால் பகல் நேரத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அதுவும் மதிய உணவு உட்கொண்ட பின் ஒரு தூக்கம் போட்டால் தான் அவர்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று நினைத்து இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் பகல் நேரம் குறிப்பாக மதிய நேரம் உணவு உட்கொண்ட பின் உறங்குவதில் உடலுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை.

நாம் உறங்க நேரத்தில் உடலில் மெட்டபாலிச சக்தி 10% குறையும். ஆனால் பகல் நேரத்தில் அவை ஆக்டிவாக இருக்கும். ஆனால் பகல் நேரத்தில் தூக்கினால் அந்த மெட்டபாலிச சக்தி குறைந்து உடல் எடைக்கு வழிவகுக்கும்.

உடல் பருமன் அதிகரிப்பதால் நம் உடலில் தேவையற்ற நோய் பாதிப்புகள் உருவாகி விடும். அதேபோல் சாப்பிட்ட உடன் உறங்க செல்லக் கூடாது. இவ்வாறு செய்வதால் நாம் உண்ட உணவு செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிலருக்கு உணவு செரிப்பதில் பாதிப்பு ஏற்படும்.

பகல் நேரத்தில் உணவு உட்கொண்ட பின் குட்டி தூக்கம் போடுறேன் என்று 2, 3 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கி வந்தோம் என்றால் உடலில் அதிக சோமேறி தனம் உருவாகி விடும்.

இதனால் எந்த வேலையும் செய்ய கடினமாக இருக்கும். உடல் உழைப்பு இல்லையென்றால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கி விடும்.

உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பு படிந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.

இரவு நேரத்தில் முறையான உறக்கம் இல்லை என்று கருதும் நபர்கள் மதிய நேரத்தில் உணவு உட்கொள்ளவதற்கு முன் 30 நிமிடங்கள் தூங்கிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உடல் சுறு சுறுப்பாக இருக்கும். அதே நேரத்தில் உடல் எடையும் கூடாது. முடிந்தவரை இரவு உறக்கத்தை நன்கு அனுபவியுங்கள். பகல் நேர உறக்கத்தை தவிருங்கள்.

Previous articleகார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!
Next articleஇஸ்ரோ விண்வெளி மையம் ரூ.63,000/- ஊதியத்தில்.. வேலை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!