நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!
நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம். தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு. இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் நெஞ்சு எரிச்சல், அல்சர், குடற் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதில் நம் அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் நெஞ்சு எரிச்சல் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள்.
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*பெருஞ்சீரகம்
*தண்ணீர்
செய்முறை…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் போது பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நெஞ்சு எரிச்சல் பாதிப்பு நீங்கும்.
தீர்வு 2:
*பால்
செய்முறை..
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி பருகவும். நெஞ்சு எரிச்சலுக்கு பால் சிறந்த தீர்வாக இருக்கும்.
தீர்வு 3:
*மோர்
*வெந்தயம்
செய்முறை
ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் பாதிப்பு நீங்கும்.
தீர்வு 4:
தேவையான பொருட்கள்:-
*துளசி இலை
*தண்ணீர்
செய்முறை…
சிறிதளவு துளசி இலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். இதை 1 கிளாஸ் நீருடன் கலந்து பருகினால் நெஞ்சு எரிச்சல் பாதிப்பு அகலும்.