ஆயுசுக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்க “கல் உப்பு + மஞ்சள்”.. இப்படி பயன்படுத்துங்கள்!!

0
96
#image_title

ஆயுசுக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படாமல் இருக்க “கல் உப்பு + மஞ்சள்”.. இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்களை வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

மூட்டு வலி வரக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலை பளு

*உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

*கல் உப்பு

*மஞ்சள் தூள்

*வெங்காயம்

*புளி

*எள் எண்ணெய்

செய்முறை:-

ஒரு உரலில் சுத்தம் செய்து வைத்துள்ள 2 சின்ன வெங்காயத்தை சேர்த்து தட்டி கொள்ளவும். பின்னர் அதில் கல் உப்பு சேர்த்து கொரகொரப்பாக இடிக்கவும்.

பின்னர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) 1 தேக்கரண்டி அதில் சேர்க்கவும். அதோடு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து இடிக்கவும். இறுதியாக எடுத்து வைத்துள்ள புளியை அந்த கலவையில் நன்கு கலக்கி மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகி மூட்டு வலுவாக இருக்கும்.

Previous articleகேரளா பெண்களை போல் முடி அடர்த்தியாகவும்.. கருமையாகவும் வளர இந்த எண்ணையை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க!!
Next articleவீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!