தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!
தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய கற்பூரவல்லி இலை ரசம் சிறந்த தீர்வாக இருக்கும்.
சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:-
*மூக்கு ஒழுகுதல்
*மூச்சு விடுதலில் சிரமம்
*தொண்டை வலி
*மூக்கடைப்பு
*தொண்டை புண்
*நீஞ்சு அனத்தம்
*தலைவலி
*வறட்டு இருமல்
*உடல் சோர்வு
சளி பாதிப்பை சரி செய்ய எளிய வழி:-
தேவையான பொருட்கள்:-
*கற்பூரவல்லி – 5 இலை
*கரு மிளகு – 1 1/2 தேக்கரண்டி
*புளி – எலுமிச்சை அளவு
*தக்காளி – 2
*பச்சை மிளகாய் – 1
*வர மிளகாய் – 2
*கல் உப்பு – தேவையான அளவு
*கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
*பூண்டு – 8 பல்
*மஞ்சள் தூள் – சிறிதளவு
*எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
*கடுகு – 1/4 தேக்கரண்டி
*சீரகம் – 1/4 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அவை நன்கு ஊறி வந்ததும் புளிக்கரைசலை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் 4 தக்காளி பழத்தை கைகளால் பிழிந்து விடவும். பின்னர் சிறிய சைஸில் கற்பூரவல்லி இலை 5 எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தழை மற்றும் இடித்த பூண்டு சேர்த்து கலக்கி விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு சிறிதளவு மிளகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் 2 வர மிளகாய், 2 பச்சை மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள கற்பூரவல்லி புளிக் கரைசலை அதில் சேர்க்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள மிளகு பொடியை அதில் சேர்த்து கலந்து விடவும். ரசம் 1 கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதை கிளாஸில் ஊற்றி வெது வெதுப்பான சூட்டில் பருகலாம். அல்லது சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும் சரி எப்படி சாப்பிட்டாலும் உடலில் உள்ள கெட்டி சளி முழுவதும் கரைந்து மூக்கின் வழியாக வந்து விடும்.