மூன்று வேளையும் வைட் ரைஸ் உண்பவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
158
#image_title

மூன்று வேளையும் வைட் ரைஸ் உண்பவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அரிசி தான்.
இந்த அரிசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகள் இருக்கிறது.

அரிசியை பாலிஷ் செய்யாமல் உண்டால் உடலுக்கு தேவையான சதுக்கள் கிடைக்கும். ஆனால் பாலிஷ் செய்யப்படாத அரிசியை விட பாலிஷ் செய்யப்பட்ட அரிசி தான் அதிக ருசியாக இருக்கும் என்பதினால் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாமல் டேட்ஸ்க்காக பாலிஷ் செய்யப்பட்ட அரசியை சமைத்து உண்டு வருகிறோம்.

அதேபோல் எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்ணுவது நல்லது. இல்லாவிட்டால் அவை நஞ்சாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அரிசி சாதத்தை தினமும் உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் ஏராளம்.

**உண்ணும் உணவு செரித்து உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலாக மாறுவதை மெட்டபாலிசம் என்று கூறுகிறோம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் உடலுக்கு தேவையான மெட்டபாலிசத்தை அரிசி உணவு மட்டப்படுகிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. எனவே அரிசி உணவை தினமும் உட்கொள்வதை தவிர்க்கவும்.

**இதில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

**அரிசி சாதத்தில் உள்ள அதிகப்படியான கலோரிகள் உடல் எடை விரைவில் அதிகரித்து விடும்.

**இதில் உள்ள கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உடல் சோர்வு, உடல் எடை கூடல், உடல் மந்த நிலை உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகத் தொடங்கி விடுகிறது.

**இதில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்பை உண்டாக்குகிறது.

**அதிகளவு அரிசி சாதம் உண்பதினால் வாயுத் தொல்லை, தூக்கமின்மை, வயிறு தொடர்பான பாதிப்பு உள்ளிட்டவைகள் உருவாகத் தொடங்கி விடுகிறது.

எனவே தினமும் அரிசி சாதம் உண்ணாமல் கோதுமை, ரவை, ராகி உள்ளிட்ட சிறு தானிய உணவுகளை எடுத்து வருவது நல்லது.

Previous articleபாட்டி வைத்தியம்.. குடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்கள் 5 நிமிடத்தில் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!
Next articleஉங்கள் ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கக் கூடிய நாளாக இருக்கிறது என்று தெரியுமா..?