உடலில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் முழுவதும் வெளியேற இதை 1 டம்ளர் பருங்குங்கள்!! இனி ஆயுசுக்கும் வாயுத் தொல்லை இருக்காது..!!

Photo of author

By Divya

உடலில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் வாயுக்கள் முழுவதும் வெளியேற இதை 1 டம்ளர் பருங்குங்கள்!! இனி ஆயுசுக்கும் வாயுத் தொல்லை இருக்காது..!!

வாயுத் தொல்லையை சாதாரண பாதிப்பாக கருத வேண்டாம். இதனால் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

*மலச்சிக்கல்

*செரிமானக் கோளாறு

*துரித உணவு

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*துளசி

*இஞ்சி

*சீரகம்

செய்முறை:-

முதலில் துளசி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும். இப்படி செய்தால் துளசியில் ஒட்டி கிடந்த மண், பூச்சி உள்ளிட்டவை நீங்கி விடும்.

நன்கு சுத்தம் செய்த பின் ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து கொள்ளவும்.

அடுத்து இஞ்சி சிறு துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பிறகு அதை ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து அதன் சாற்றை ஏற்கனவே எடுத்து வைத்துள்ள துளசி சாற்றுடன் கலக்கவும். அம்மிக்கல் இல்லாதவர்கள் மிக்ஸி பயன்படுத்தி அரைக்கலாம்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் துளசி மற்றும் இஞ்சி சாற்றை கலந்து விடவும். அடுத்ததாக 1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு குடித்த அடுத்த 5 நிமிடத்தில் உடலில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி விடும். இந்த ரெமிடியை அவ்வப்போது செய்து பருகி வந்தோம் என்றால் ஆயுசுக்கும் வாயு தொல்லை பிரச்சனை ஏற்படாது.