இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..?

0
66
#image_title

இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..?

நம் உணவில் சேர்க்கும் பெருங்காயம் ஒரு மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இவை உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இதில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து இருக்கிறது.

பெருங்காய நீர் பருகவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)வாயுத் தொல்லையை சரி செய்ய உதவுகிறது.

2)மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்துகிறது.

3)உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது.

4)செரிமானக் கோளாறை சரி செய்கிறது.

5)உயர் இரத்த அழுத்த பாதிப்பை குணப்படுகிறது.

6)சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.

7)குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.

8)தலைவலியை சரி செய்ய உதவுகிறது.

9)மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*தண்ணீர்

*பெருங்காயத் தூள்
(அல்லது) கட்டி பெருங்காயம்

*தேன்
(அல்லது)
எலுமிச்சை சாறு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் சிறு துண்டு கட்டி பெருங்காயம் அல்லது 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

அவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.