உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

0
112
#image_title

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு:-

*பித்தம்

*தலைமுடி உதிர்தல்

*வாய்ப்புண்

*தோல் தொடர்பான பாதிப்பு

உடல் உஷ்ணத்தை தணிக்க எளியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி

*தண்ணீர்

*சோம்பு

*சீரகம்

*கற்கண்டு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை, 1 தேக்கரண்டி சோம்பு மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து முந்தின நாள் இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற வைத்துள்ள பொருட்களை தண்ணீருடன் சேர்க்கவும். அதன் பின் 1 துண்டு கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். நாம் சேர்த்துள்ள பொருட்கள் அனைத்தும் உடல் உஷ்ணத்தை குறைக்கக் கூடிய பொருளாகும்.

Previous articleநுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!
Next articleநீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க !!