நுரையீரல் சளி பாதிப்பு குணமாக இதை 1 டம்ளர் குடிங்க..!! 100% பலன் கிடைக்கும்..!!
சளி பாதிப்பு சாதாரண ஒன்றாக நாம் கருதி அலட்சியப்படுத்துவதால் அவை நாளடைவில் நுரையீரலில் தங்கி தீராத சளி பாதிப்பாக மாறி விடுகிறது. நுரையீரலில் தேங்கி கிடக்கும் இந்த சளியை நிமிடத்தில் கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து கசாயம் செய்து பருகுவதன் மூலம் தீர்வு கண்டு விடலாம்.
நுரையீரல் சளிக்கான அறிகுறி:-
தொண்டையில் வலி ஏற்படுதல், தொண்டை புண், நெஞ்சில் அனத்தம், அதிகப்டியான தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு இருமல், உடல் சோர்வு.
தேவையான பொருட்கள்:-
*தூதுவளை
*மிளகு
*பூண்டு
*சீரகம்
*மஞ்சள் தூள்
*உப்பு
செய்முறை:-
முதலில் 1 கைப்பிடி அளவு தூதுவளை இலை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து 2 பல் பூண்டை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தூதுவளை இலை, இடித்த பூண்டு, சீரகம், மிளகை சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு உப்பு சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.