உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதோ அதற்கு சில உணவுப் பொருட்கள்!!

0
175
#image_title

உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமா? இதோ அதற்கு சில உணவுப் பொருட்கள்!!

நம்முடைய உடலில் மிகவும் முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு என்ன என்றால் அது கண் தான். கண்கள் இல்லை என்றால் நாம் உலகத்தில் எதையும் பார்க்க முடியாது. ஒரு மனிதனுக்கு கண்கள் என்பது மிகவும் அவசியமான உறுப்பு ஆகும்.

இந்த கண்களை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். அதே சமயம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உணவுப் பொருளையும் நாம் சாப்பிடக்கூடாது. அதே போல கண்களுக்கு சில பயிற்சிகள் உள்ளது. அந்த பயிற்சி முறைகளையும் நாம் செய்ய வேண்டும்.

அந்த வகையில் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய உணவு பண்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கண்களுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கக் கூடிய உணவு பொருட்கள்…

* பொதுவாக கீரைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் முருங்கைக் கீரை கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றது. அதே போல கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கக் கூடிய கீரைகளில் பொன்னாங்கண்ணி கீரையும் ஒன்று.

* வைட்டமின் ஈ சத்து அதிகளவில் உள்ள பாதாம் பருப்பு நாம் சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தெளிவான பார்வை கிடைக்கும். மேலும் கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* கிட்ஸ் பழ வகைகளை நாம் சாப்பிட்டு வந்தாலும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிட்சை ஆகிய கிட்ஸ் பழங்களை சாப்பிடுவதால் நம்முடைய கண்களில் உள்ள விழித்திரையின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

* கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் கேரட் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது பெரும்பாலான மக்கள் கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கூறுவார்கள். கேரட்டில் பீட்டா கரோடின் சத்து அதிகம் உள்ளது. அதே போல விட்டமின் ஏ சத்தும் அதிகளவில் உள்ளது. இதனால் கேரட் சாப்பிடுவதால் கண்களுக்கு ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும்.

* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்களை சாப்பிடுவேன் மூலமாக கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கின்றது. கண்களில் வெட்கித் தன்மை அதிகரிக்காமல் இருக்க நாம் ஒமேகா 3 அமிலங்கள் உள்ள மீன்களை சாப்பிட வேண்டும். மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் இருக்க மீன்களை சாப்பிட வேண்டும். மீன்களை போல ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்டையும் நாம் சாப்பிடலாம்.