குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!!

0
113
#image_title

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!!

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டு சென்று விட்டது.

இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது அடுத்து இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த மழையானது இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தின் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.