மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

0
292
#image_title

மூட்டு வலி? இதை குணமாக்க “பச்சை கற்பூரம்” போதும்..!! நம்புங்க அனுபவ உண்மை..!!

வயதானவர்களுக்கு பெரும் வேதனையாக இருந்து வந்த மூட்டு வலியானது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதினருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது. இந்த மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணமே உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதனால் தான். இந்த மூட்டு வலி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி கவனித்து சரி செய்து கொள்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாக அமைந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

*பச்சைக் கற்பூரம்

*புதினா இலை

செய்முறை…

முதலில் 15 முதல் 20 புதினா இலைகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் புதினா இலை சாற்றை கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து 1 தூண்டு பச்சைக் கற்பூரத்தை புதினா சாற்றில் சேர்த்து கலந்து மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் தடவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர மூட்டு வலி சில நாட்களில் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*விளக்கெண்ணெய்

*பூண்டு

*மஞ்சள்

செய்முறை..

முதலில் 1 பல் பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அடுத்து அதில் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் மஞ்சளை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இவை இளஞ்சூட்டிற்கு வந்ததும் மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் தடவி விடவும். இவ்வாறு அடிக்கடி செய்து வருவதன் மூலம் மூட்டு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleவீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!
Next articleஅடடே.. அம்மான் பச்சரிசி இலை நம் உடலுக்கு இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறதா..?