உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!!

0
279
#image_title

உடலுக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்க உதவும் “ஹனி + ஜிஞ்சர்”..!!

இஞ்சி அதிக வாசனை மற்றும் சுவையை வழங்கக் கூடிய பொருள் என்பதினால் இவை உணவில் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. இஞ்சி வாசனை நிறைந்த பொருள் மட்டும் அல்ல. இவை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். இந்த இஞ்சியில் டீ, துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இஞ்சியில் புரதங்கள், தாதுக்கள், வைட்டமின் சி, பி6, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், போல்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை நம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியவையாக இருக்கிறது. இந்த இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

“தேன் இஞ்சி”.. செய்முறை:-

முதலில் இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி ஒரு காட்டன் துணி கொண்டு துடித்துக் கொள்ளவும். அடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு கண்ணாடி ஜாரில் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை கீறல் போட்டு சேர்த்து இஞ்சி மூழ்கும் அளவிற்கு தேன்ஊற்றிக் கொள்ளவும். இதை மூடி போட்டு இரண்டு அல்லது 3 நாட்கள் வரை ஊற விட்டு பின்னர் சாப்பிடலாம்.

தேன் இஞ்சி பயன்கள்:-

1)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

2)செரிமான பிரச்சனையை சரி செய்யும்.

3)உடல் எடையை குறைக்க உதவும்.

4)இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்கும்.

5)பித்த்தை சரி செய்ய உதவும்.

6)உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறும்.

7)சரும பிரச்சனை அகலும்.

8)சளி, இருமல், தொண்டை வலிக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

9)தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

10)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்யும்.

Previous articleகேரளா ஸ்டைல் பூண்டு சட்னி – சுவையாக செய்வது எப்படி?
Next articleநீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்கள் கைக்கு விரைவில் வந்து சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!