வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

0
277
#image_title

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும், முறையாக உணவு உட்கொள்ளாததாலும் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு ஏற்படுகிறது. இவை இரைப்பை மற்றும் சிறுகுடலில் உருவாகும் நோய் பாதிப்பு ஆகும். வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு இருந்தால் முதலில் வயிற்று வலி தான் ஏற்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போன்று வலி ஏற்படும்.

இந்த வயிற்றுப்புண் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*மிளகு

*உலர் திராட்சை

*வெற்றிலை

செய்முறை…

ஒரு உரலில் 2 மிளகு, 2 வெற்றிலை மற்றும் 5 உலர் திராட்சை சேர்த்து இடித்து கொள்ளவும்.

இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*மணத்தக்காளி கீரை

*தண்ணீர்

செய்முறை..

ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரையை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி மணத்தக்காளி கீரை பொடியை 1 கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தினால் வயிற்றுப்புண்(அல்சர்) குணமாகும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட்

*தேன்

செய்முறை…

தேவையான அளவு பீட்ரூட் எடுத்து தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். இதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

தீர்வு 04:

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் பால்

*ஏலக்காய் தூள்

*நாட்டு சர்க்கரை

செய்முறை…

ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் மற்றும் 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தினால் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகும்.

Previous articleமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் 7 தினங்களில் மறைய இவ்வாறு செய்யுங்கள்..!!
Next articleகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!