தெரிந்து கொள்ள வேண்டிய 15 சித்த வைத்திய குறிப்புகள்..!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ள வேண்டிய 15 சித்த வைத்திய குறிப்புகள்..!!

1)சுக்கு சிறிதளவு எடுத்து அரைத்து விழுதாக்கி முகப்பருக்களில் மீது தடவி வர அதன் பாதிப்பு விரைவில் குணமாகும்.

2)வெற்றிலை மற்றும் மிளகை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சளி, இருமல் பாதிப்பு குணமாகும்.

3)ஒரு டம்ளர் சூடு நீரில் சிறிதளவு விளக்கெண்ணெய், உப்பு, எலுமிச்சை சேர்த்து பருகினால் குடல் சுத்தமாகும்.

4)கைப்பிடி அளவு முருங்கை கீரையை சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

5)ஒரு டம்ளர் கேரட் சாறில் 1/4 ஸ்பூன் ஏலக்காய், 1/2 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.

6)சாதம் வடித்த தண்ணீர் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.

7)தேங்காய் எண்ணெயில் 1 துண்டு கற்பூரம் சேர்த்து சூடுபடுத்தி கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு நீங்கும்.

8)வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து அருந்தினால் வயிற்று வலி குணமாகும்.

9)மொந்தன் வாழை பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

10)சின்ன வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

11)மருதாணி இலையை அரைத்து சேற்று புண் இருக்கும் இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு குணமாகும்.

12)தேங்காய் எண்ணெய் மற்றும் தயிரை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு பாதிப்பு நீங்கும்.

13)வெள்ளை மிளகை பால் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

14)நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விக்கல் தீரும்.

15)வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.