குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதும் வெளியேற ஒரு இரவு மட்டும் இதை குடிங்க..!!

0
273
#image_title

குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதும் வெளியேற ஒரு இரவு மட்டும் இதை குடிங்க..!!

குடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குடலில் உள்ள இந்த தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மலச்சிக்கல் பாதிப்பால் அவற்றை முறையாக கழிக்க முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

நம்மில் பலர் காலை நேரத்தில் மலம் கழிக்க சோம்பல் பட்டுக்கொண்டு அடக்கி வைத்து விடுவதால் அவை மலசிக்கலாக மாறி விடுகிறது. அதுமட்டும் இன்றி நார்ச்சத்து இல்ல உணவை உண்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:-

*கடுக்காய் பொடி – 100 கிராம்

*ஓமம் – 50 கிராம்

செய்முறை…

கடுக்காய் மற்றும் ஓமத்தை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளவும். இதை இரவு உணவுக்கு பின் 100 மில்லி சுடுநீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் அடியோடு குறையும். இதனால் குடல் சுத்தமாகும்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:-

*கடுக்காய்

*நெல்லிக்காய்

*தான்றிக்காய்

செய்முறை…

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயை காயவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இரவு நேரத்தில் 1/2 ஸ்பூன் என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு’முழுமையாக நீங்கும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்:-

*அத்திப்பழம்

*பப்பாளி பழம்

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு அத்திப்பழம் மற்றும் ஒரு கீற்று பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

Previous article7 நாட்களில் “பாத வெடிப்பு” குணமாக வேண்டுமா..? அப்போ இதை இரவு நேரத்தில் ட்ரை பண்ணுங்க போதும்..!!
Next articleமுகம் பொலிவாக இருக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..!!