நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

0
194
#image_title

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

1)கற்பூரவல்லி இலையை அரைத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுதும் கரைந்து வெளியேறும்.

2)துளசி மற்றும் வெற்றிலை அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து காலை, இரவு என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும்.

3)ஓமம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் மார்பு சளி பாதிப்பு சரியாகும்.

4)துளசி, தூதுவளையை வேக வைத்து அதன் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் புளி ரசத்தில் துளசி, தூதுவளை தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து பருகவும்.

5)கொள்ளு சூப் குடித்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்.

6)மிளகு, இஞ்சியை இடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் சளி பாதிப்பு நீங்கும்.

7)உலர் திராட்சை, இஞ்சி, மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதை ஆகியவற்றை சிறிதளவு எடுத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் சளி பாதிப்பு குணமாகும்.

8)தேங்காய் எண்ணெயில் 1 துண்டு கற்பூரம் சேர்த்து காய்ச்சி மார்பில் தேய்த்தால் சளி கரைந்து வெளியேறி விடும்.