நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்!
அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் சளி தொல்லையும் ஒன்று. ஆரம்ப நிலையில் சரி செய்யத் தவறினால் அவை நாளடைவில் நுரையீரல் சளியாக மாறி விடும்.
இதனால் வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூக்கில் நீர் ஒழுகுதல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி பானம் செய்து பருகினால் நுரையீரல் சளி பிரச்சனை உடனடியாக சரியாகி விடும்.
தேவையான பொருட்கள்:-
*கருந்துளசி
*ஓமவல்லி
*வெற்றிலை
*சுக்கு
*நாட்டு சர்க்கரை
*மிளகு
*சீரகம்
செய்முறை:-
அடுப்பு ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் ஓமவல்லி, துளசி, வெற்றிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு அதனுடன் சிறு துண்டு சுக்கை இடித்து சேர்க்கவும்.
பிறகு மிளகு மற்றும் சீரகம் தேவையான அளவு எடுத்து தனி தனியாக இடித்து அதில் சேர்த்து கொள்ளவும். 1 1/2 டம்ளரில் இருந்து 1 டம்ளராக வரும் வரை கொதிக்க விட்டு 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து உடலை விட்டு வெளியேறி விடும்.