பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!
1)காபிக்கொட்டை தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குறையும்/
2)டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் தலை பாரம் நீங்கும்.
3)கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலை சாறை தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.
4)மாமரப் பட்டையை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி நிற்கும்.
5)தினமும் இரவு 1 வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.
6)முட்டைகோஸை ஜூஸ் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.
7)வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக அடிக்கடி அகத்தி கீரை ஜூஸ் செய்து அருந்தி வரலாம்.
8)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள் கொள்ள கொத்தவரை ஜூஸ் அருந்தி வரலாம்.
9)இலவங்கப்பட்டையை தூள் செய்து 2 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வர மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான இரத்த போக்கு நிற்கும்.
10)இரத்தத்தை சுத்திகரிக்க அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம்.
11)ஒரு கிளாஸ் பாலில் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் விதை பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி கலந்து அருந்தி வந்தால் மதுப்பழக்கம் நிற்கும்.
12)மிளகு, சீரகம், மஞ்சள், துளசி ஆகியவற்றை நீரில்’சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனே நிற்கும்.
13)முடக்கத்தான் இலையை உலர்த்தி பொடியாக்கி நீரில் கொதிக்கவைத்து அருந்தினால் மூட்டுவலி குணமாகும்.
14)தினமும் 1 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தினால் மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.
15)மாதுளை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புது இரத்தம் ஊறும்.