இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்!

0
266
#image_title

இந்த கைவிரல் பயிற்சி.. உடலில் உள்ள அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும்!

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கை. கை இல்லாவிட்டால் எந்த ஒரு வேலையும் செய்வது அவ்வளவு எளிதல்ல. 5 விரல்களை கொண்ட கை பல வித பாதிப்புகளை சரி செய்ய உதவும்.

அதாவது கையில் உள்ள ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு உறுப்போடு பிணைப்பில் இருக்கிறது. இவை உடல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது. இதை தான் கை விரல் பயிற்சி என்று சொல்கிறார்கள்.

1)கட்டை விரல்: 5 விரல்களில் கட்டை விரல் நீளம் குறைவு என்றாலும் இந்த விரல் பல வித நோய்களை குணப்படுத்தும். இந்த விரலுக்கு அழுத்தம் கொடுப்பதினால் மன அழுத்தம் குறையும். நல்ல உறக்கம் பெற முடியும். இந்த கட்டை விரல் மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் தொடர்புடையது. கட்டை விரல் பயிற்சி உடலில் செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

2)ஆள்காட்டி விரல்: 5 விரல்களில் ஆள்காட்டி விரல் சற்று ஸ்பெஷல் ஆன விரல் ஆகும்.
இந்த ஆள்கட்டி விரல் பயிற்சி பலவீனம் மற்றும் பயத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் தொடர்புடையது. தினமும் ஆள்காட்டி விரல் பயிற்சி செய்வதினால் சிறுநீரகத்தில் கற்கள், நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

3)நடுவிரல்: 5 விரல்களில் பாம்பு விரல் என்று நாம் அழைக்கும் நடுவிரல் கோபத்தைக் குறைக்க உதவுகிறது. நடு விரல் பயிற்சி செய்வதினால் இரத்த ஓட்டம் சீராகும். இந்த விரல் கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் தொடர்புடையது. எனவே நடுவிரல் பயிற்சி செய்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

4)மோதிரவிரல்: கை விரல் பயிற்சியில் மோதிர விரல் பயிற்சி உங்களுடைய எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க உதவுகிறது. இந்த விரல் நுரையீரலுடன் தொடர்புடையது. மோதிர விரலால் சுவாசக் கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு சரியாகும். உடலில் உள்ள தசைகளின் வலிமை அதிகரிக்கும்.

5)சிறுவிரல்: 5 விரல்களில் சிறுவிரல் பார்க்க அழகான ஒன்றாக இருக்கிறது. அளவில் சிறியவை என்றாலும் இந்த விரல் பயிற்சி இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இந்த விரல் பயிற்சி மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.