நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!
1)வெள்ளருக்கு பொடி
*இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும்.
2)நன்னாரி பொடி
*இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும்.
3)வெட்டி வேர் பொடி
*இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் சூடு குறையும், முகம் பொலிவாக இருக்கும்.
4)நெருஞ்சில் பொடி
*இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கோளாறு நீங்கும்.
5)கஸ்தூரி மஞ்சள் பொடி
*இந்த பொடியை முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.
6)கற்றாழை பொடி
*இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு சர்க்கரை பாதிப்பு நீங்கும்.
7)மருதாணி பொடி
*மருதாணி பொடியை நீர் கலந்து கை, கால்களில் பூசி வர பித்தம், உடல் சூடு குறையும்.
8)அருகம்புல் பொடி
*1 கிளாஸ் சூடு நீரில் 1 ஸ்பூன் அருகம்புல் பொடி சேர்த்து நன்கு கலந்து அருந்தி வந்தால்
உடல் எடை குறையும்.
9)நெல்லிக்காய் பொடி
*தினமும் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சாப்பிட்டு வந்தால் பற்கள் பலம் பெறும்.
10)கறிவேப்பிலை பொடி
*தினமும் 1 ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும். முடி கருமையாக இருக்கும்.
11)வல்லாரை பொடி
*தினமும் 1 ஸ்பூன் வல்லாரை பொடியை நீரில் கலந்து அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும்.
12)நவால் பொடி
*தினமும் 1 ஸ்பூன் நவால் பொடி நீரில் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய், தலைசுற்று நீங்கும்.
13)தூதுவளை பொடி
*தினமும் 1 ஸ்பூன் தூதுவளை பொடியை நீரில் கலந்து அருந்தி வந்தால் சளி, ஆஸ்துமா, இருமல் குணமாகும்.
14)துளசி பொடி
*1 ஸ்பூன் துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவும்.
15)ஓரிதழ் தாமரை பொடி
*இந்த பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவும்.