பூரான் கடியை எளிதில் குணமாக்கும் கை வைத்தியம்!

0
236
#image_title

பூரான் கடியை எளிதில் குணமாக்கும் கை வைத்தியம்!

விஷ பூச்சி இனத்தை சேர்ந்த பூரான்(நூறுகால் பூச்சி) கடித்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது. பூரான் கடிக்கும் பொழுது வலி இருக்காது என்றாலும் கடித்த சில மணி நேரத்தில் வலி ஏற்பட ஆரம்பிக்கும்.

பூரான் கடித்தால் உடலில் அதிக தடிப்பும், அரிப்பும், எரிச்சல் உணர்வும் ஏற்படும். இந்த பூரான் கடிக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது நல்லது.

மண்ணெண்ணெய் இருந்தால் பூரான் கடித்த இடத்தில் தடவலாம். இதனால் தடிப்புகள் மறையும்.

குப்பைமேனி இலை மற்றும் உப்பை அரைத்து பூரான் கடித்த இடத்தில் பூசி விடலாம்.

வெற்றிலையை அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவி விடலாம். அதேபோல் வெற்றிலை சாற்றை சிறிதளவு அருந்தலாம்.

மிளகை அரைத்து பொடியாக்கி 1 கிளாஸ் சுடுநீரில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வரலாம்.

முத்தின தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் விஷம் முறியும்.

பூண்டை தோல் நீக்கி நறுக்கி பூரான் கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.

சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து பூரான் கடித்த இடத்தில் பூசி விடலாம்.

Previous articleவீட்டில் நிம்மதி ஏற்பட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!
Next articleநீண்ட நாள் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேற ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!