நடிகை சமந்தா உடலை பிட்டாக வைக்க தினமும் இதை தான் குடிக்கிறார்!

Photo of author

By Divya

நடிகை சமந்தா உடலை பிட்டாக வைக்க தினமும் இதை தான் குடிக்கிறார்!

Divya

Updated on:

நடிகை சமந்தா உடலை பிட்டாக வைக்க தினமும் இதை தான் குடிக்கிறார்!

உடல் பிட்டாக இருந்தால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். ஆனால் மோசமான உணவுமுறை பழக்கம் எளிதில் உடை எடையை கூட்டி விடுகிறது. இந்த உடல் எடையை குறைக்க கடினமான உடற்பயிற்சி, டயட் மேற்கொண்டாலும் உடல் எடை மட்டும் குறைந்தபாடில்லை என்று எண்ணி வருந்தும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூதியை செய்து பருகுங்கள்.

இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறையும்.

தேவையான பொருட்கள்:-

*இலைக்கோசு – 1 கைப்படி அளவு

*ஆளிவிதை – 2 தேக்கரண்டி

*பசலை கீரை – 1 கைப்படி அளவு

*சூரிய காந்தி விதை – 1 தேக்கரண்டி

*பாதாம் பருப்பு – 1 தேக்கரண்டி

*சியா விதை – 1 தேக்கரண்டி

*இளநீர் – 1 கப்

செய்முறை…

ஒரு பாத்திரத்தில் 1 கைப்பிடி அளவு பசலை கீரை, 1 கைப்பிடி அளவு இலைக்கோசு சேர்த்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தம் செய்து வைத்துள்ள பசலை கீரை மற்றும் இலைக்கோசு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1 கப் இளநீர் தண்ணீர் சேர்க்கவும். பிறகு 1 தேக்கரண்டி இடித்த பாதாம் பருப்பு, 1 தேக்கரண்டி சியா விதை, 1 தேக்கரண்டி சூரிய காந்தி விதை, 2 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும். இந்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து ஒரு டம்ளருக்கு மாற்றி கொள்ளவும். இந்த ஆரோக்கியமான ஸ்மூதியை காலை நேரத்தில் பருகி வந்தால் உடல் எடை சுலபமாக கட்டுக்குள் வரும்.