பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்!

0
189
#image_title

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்!

பெண்களுக்கு இருக்கக் கூடிய பொதுவான பிரச்சனை வெள்ளைப்படுதல். இவை பெண்களின் பருவ வயதிலும், மாதவிடாய் ஏற்படும் பொழுதும், கருவுற்று இருக்கும் பொழுதும் ஏற்படக் கூடிய சாதாரண ஒன்றாக இருந்தாலும் இவை அதிகளவில் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் தீர்வு காண்பது நல்லது.

இயற்கை முறை வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

*பார்லி
*மிளகு
*சீரகம்
*மஞ்சள்
*பூண்டு
*உளுந்து

செய்முறை…

100 கிராம் அளவு பார்லி மற்றும் உளுந்து பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊறவைத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 10 கிராம் அளவு மிளகு. சீரகம், மஞ்சள் மற்றும் பூண்டு சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு நாளைடைவில் குணமாகும்.

இயற்கை வைத்தியம்…

தேவைப்படும் பொருட்கள்:-

*பால்
*மஞ்சள்
*பனங்கற்கண்டு

செய்முறை…

சூடான பாலில் 1 ஸ்பூன் மஞ்சள் மற்றும் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.

இயற்கை வைத்தியம்…

*மோர்
*சோற்றுக்கற்றாழை
*உப்பு

செய்முறை…

ஒரு சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஜெல்லை 3 – 4 முறை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1 கிளாஸ் மோர் சேர்த்து அதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து ஒரு டம்ளருக்கு மாற்றி அருந்தவும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.